கடமையில் இருக்கும் போதே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி நேற்றிரவு (16) உயிரிழந்துள்ளார்.
முள்ளிப்பொத்தானை 96ம் கட்டை பகுதியில் ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவளையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை எனும்மிடத்தில் கைது செய்ய முற்பட்ட போதே மயங்கி விழுந்துள்ள நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த அச்சி மொகம்மது பாரிஸ் (49வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
