யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி படுகாயம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்றையதினம் (18.03.2025) காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன், சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |