புத்தாண்டில் தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - பொலிஸாரை மோதித் தள்ளிய வாகனம் - ஒருவர் பலி
அம்பலந்தோட்டையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது காரில் வந்த ஒரு குழுவினர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்துமாறு சமிக்ஞை செய்திருந்தாலும், ஓட்டுநர் பொலிஸாரின் உத்தரவை புறக்கணித்து முன்னோக்கி ஓட்டிச் சென்றதால், இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கார்
விபத்தை ஏற்படுத்திய வெள்ளை நிற கார் ஹம்பாந்தோட்டை நோக்கி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அது தங்கல்லையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர் பொலிஸ் கான்ஸ்டபிள் சரத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பலத்த காயங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் பாதுகாப்பு அதிகாரி அம்பலந்தோட்டை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அல்லது அதில் இருந்த சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri