பாதாள உலகப் பணத்தை 70 முறை வைப்பிலிட்ட பொலிஸ் கண்காணிப்பாளர்!
திட்டமிட்ட குற்றவாளிகளிடமிருந்து இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் சதீஷ் ரஞ்சன் ஹியாரே கமகே, தனது மனைவி மற்றும் மகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பெற்றுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சந்தேக நபரான பொலிஸ் கண்காணிப்பாளரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
விசாரணைகளின் போது முன்னர் அடையாளம் காணப்பட்ட கணக்குகளுக்கு மேலதிகமாக, மற்றொரு வங்கிக் கணக்கில் 10 மில்லியனுக்கும் அதிகமான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
விசாரணையில் முக்கிய சாட்சி
மேலும், சந்தேக நபரின் சாரதியால் 67 முறையும், மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளினால் 3 முறையும் இந்தக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இந்த வழக்கில் சாட்சிகளின் அப்படையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி அக்மீமன பொலிஸாரால் விசாரணையில் முக்கிய சாட்சி ஒருவர் கைது செய்யப்பட்டு சந்தேகநபரால் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
மேலும், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால் சந்தேக நபரை மேலும் காவலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்கமைய சந்தேக நபருக்காக முன்னிலையான சட்டத்தரணி குற்றச்சாட்டுகளை மறுத்து அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை உத்தரவை கோரியுள்ளார்.
இரு தரப்பினரின் உண்மைகளையும் பரிசீலித்த தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணை விண்ணப்பத்தை நிராகரித்து, விசாரணைகளை விரைவாக முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
