டிப்பர் வாகன இலக்கத் தகடு மோசடி! பொலிஸ் உத்தியோகத்தர் கைது
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (23.06.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2024ஆம் ஆண்டு நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய டிப்பரின் இலக்கத்திற்கு பதிலாக வேறு டிப்பர் ஒன்றின் இலக்கத்தினை பயன்படுத்தி நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை முன்னெடுப்பு
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (23.06.2026) முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவர் எதிர்வரும் 02.07.2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.