பொலிஸ் அதிகாரியால் இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி
2 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் தலங்கம பொலிஸ் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள்
நிவிதிகல, உடகரவிட்ட பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் அவரது சகோதரர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நிவிதிகல பொலிஸார் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri