தற்கொலை செய்துக்கொண்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி
புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தனது வீட்டில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடமை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில் தற்கொலை

பள்ளம பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாராயண முதியன்சலாகே சரத் ஜயந்த என்ற பொலிஸ் அதிகாரியே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகரான இவர் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார். இவர் கடமை முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவர் ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்திலும் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு முன்னரே உடப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படடள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையில் மரணப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri