வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Thileepan Mar 09, 2024 10:41 PM GMT
Report

வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (09.03.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சட்டவிரோத மரக்கடத்தல்: பொலிஸாரால் முற்றுகை

முல்லைத்தீவில் சட்டவிரோத மரக்கடத்தல்: பொலிஸாரால் முற்றுகை

சிவராத்திரி பூஜை வழிப்பாடுகள்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நீதிமன்றத்தில்‌ தற்போது வழக்கு விசாரணைகள்‌ நிலுவையிலுள்ள போதிலும்‌ நெடுங்கேணி பொலிஸ்‌ பிரிவில்‌ உள்ள வெடுக்குநாறி மலையில்‌ தொல்பொருள்‌ நிலையப்‌ பிரதேசத்தினுள்‌ சிவராத்திரி பூஜையை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்‌ என தொல்பொருள்‌ பிரதேசத்தில்‌ உள்ள இந்து ஆலய பூசகர்‌ உள்ளிட்ட குழுவினர்களினால்‌ வவுனியா நீதவான நீதிமன்றத்தில்‌ இலக்கம்‌ B540/23 இன்‌ கீழ்‌ மனுதாக்கல்‌ செய்யப்பட்டு அனுமதி கோரப்பட்டது.

வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை | Police Media Reported Vedukunari Shiv Temple Issue

எனினும்‌, அவ்வாறான விஷேட பூஜைகள்‌ நடாத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என நீதிமன்றம்‌ கடந்த 2024 மார்ச் 04 ஆம்‌ திகதியன்று தீர்ப்பு வழங்கியது.

மேலும்‌, தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பகல்‌ நேரத்தில்‌ சாதாரணமாக நடாத்தப்படும்‌ வழிபாட்டு பூஜைகளுக்கு மேலதிகமாக விஷேட பூஜைகள்‌ நடாத்துவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என 2024 மார்ச் 06ஆம்‌ திகதி தொல்பொருள்‌ பதில்‌ பணிப்பாளரினால்‌ வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்‌ மா அதிபரிடம்‌ விடுக்கப்பட்ட கோரிக்கையின்‌ பிரகாரம்‌ நேற்று (08) சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிஸ்‌ உத்தியோகத்தர்கள், தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டனர்.

எவ்வாறாயினும்‌, தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ மஹா சிவராத்தரி தினத்தன்று 500 இற்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள்‌ வருகை தந்து சாதாரணமாக பூஜை வழிபாடுகள்‌ செய்தனர்‌. 

வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை | Police Media Reported Vedukunari Shiv Temple Issue

இரவு நேரத்தில்‌ தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பூசகர்கள்‌ மற்றும்‌ 40 பேரை கொண்ட குழுக்களால்‌ நீதிமன்ற தீர்ப்பையும்‌ மீறி தொல்பொருள்‌ இணைக்களம்‌ அல்லது வனப்‌ பாதுகாப்பு திணைக்களத்தின்‌ அனுமதியின்றி நேற்று (08) இரவு நேரத்தில்‌ யாகம்‌ செய்து விஷேட சிவராத்திரி பூஜைகள்‌ நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு

இரவு கடமையிலிருந்த பொலிஸ்‌ உத்தியோகத்தர்களால்‌ அவ்வாறு செய்ய வேண்டாம்‌ என தெரிவித்தபோதிலும்‌ அவர்கள்‌ அதனையும்‌ மீறி தொடர்ந்து செயற்பட்டதுடன்‌, நீதிமன்ற தீர்ப்பையும்‌ மீறி நாட்டில்‌ நிலவும்‌ வறட்சியான காலநிலை காரணமாக வனப்‌ பிரதேசத்தினுள்‌ யாக பூஜைகள்‌ நடாத்துவதன் ஊடாக வனப்‌ பிரதேசத்தில்‌ தீ ஏற்பட்டு, அழிவடைவதற்கான சந்தர்ப்பம்‌ உள்ளதால்‌ வனப் பிரதேசத்தில்‌ அத்துமீறி பிரவேசித்தமை மற்றும்‌ சட்ட முரணற்ற வகையில்‌ ஒன்று கூடிய மக்கள்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனும்‌ குற்றத்தின்‌ கீழ்‌ பிரதான பூசகருடன்‌ 08 பேரை பொலிஸார்‌ கைது செய்துள்ளனர்‌.

வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை | Police Media Reported Vedukunari Shiv Temple Issue

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நெடுங்கேணி, புளியங்குளம், கனகராயன்குளம், மாமடுவை ஆகிய பிரதேசத்தில் வசிக்கும் 24, 29, 30, 34, 37 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம்

திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம்

கனடா - ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் வெளிவரும் மேலும் பல தகவல்கள்

கனடா - ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் வெளிவரும் மேலும் பல தகவல்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US