புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
புத்தளம் (Puttalam) ஆராச்சிக்கட்டுவை பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிலாபம், விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று சிறுவர்களை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பெற்றோர் முறைப்பாடு
இந்நிலையில் குறித்த சிறுவர்களை பொலிஸார் கடுமையாக தாக்கிக் காயப்படுத்தியதாக அவர்களின் பெற்றோர் சிலாபம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
