தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகித்த எம்பிக்கு பொலிஸார் இடையூறு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அணியினர் இன்று (13) கிளிநொச்சியில் (Kilinochchi) துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளதுடன் துண்டுபிரசுர விநியோகத்தினை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்குமாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட கஜேந்திரன் அணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் இடையூறு
தொடர் நடவடிக்கை
மேலும், பொலிஸாருக்கும் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah kajendran) உள்ளிட்ட அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் வகையிலான துண்டுபிரசுரங்களையும் பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குறித்த தரப்பினர் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam