அதிகாரபூர்வ இல்லத்தில் தகாத செயல்: பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கைது
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்தமை மற்றும் இயற்கைக்கு மாறான தகாத செயலில் ஈடுபட முயன்றமை தொடர்பாக அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அமைவாக, மதுகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இந்த மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார் என்பது நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஏதோ ஒரு அவசர தேவைக்காகவே தங்களை அழைப்பதாக நினைத்து முறைப்பாட்டாளரான பொலிஸ் உத்தியோகத்தர் அந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற போதே அவர் தகாத செயற்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri