பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
அனுராதபுரம், பசவக்குளம ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டோலுகந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்ஸா என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
குளிப்பதற்கு ஏற்ற இடங்களில் மாத்திரம் குளிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த இடங்களில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

Jaffnaவில் உள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு தனது மகளுடன் சென்றுள்ள தமிழ் சினிமா பிரபலம்... யார் பாருங்க Cineulagam
