கொழும்பில் 17 வயது மாணவியை தவறான முறைக்குட்படுத்திய 5 இளைஞர்கள் கைது
ஹங்வெல்ல (Hanwella), எம்புல்கம பிரதேசத்தில் காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (22.06.2024) இடம்பெற்றுள்ளதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி நேற்றையதினம் தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஜந்து இளைஞர்கள், மாணவியை பலாத்காரமாக ஏற்றிச்சென்று பாழடைந்த கட்டிடம் ஒன்றினுள் வைத்து தவறான முறைக்குட்படுத்தியுள்ளனர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றம்
கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 21 முதல் 24 வயதுடைய இளைஞர்களே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri