பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்ட இரகசிய கமெரா! சூத்திரதாரி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
கம்பஹாவில் பயிற்சி வகுப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் நவீன கமெரா பொருத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும், அவர் கைது செய்யப்படும் வரை அவரின் அடையாளங்களை வெளியிட முடியாது என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக இதுவரை 20 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் குறித்த நிறுவன உரிமையாளர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்..
மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு அதிர்ச்சி - கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா
மாணவிகளின் கழிவறைக்குள் இரசிய கமரா! - கம்பஹா பொலிஸார் தீவிர விசாரணை



