இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
மியான்மரில் மனித கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அமுனகும்புர - வதுரகமவை வசிப்பிடமாகக் கொண்ட நிரோஷன ஷஷிக டிலான் என்பவரை அடையாளம் காணுமாறும் உதவி கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தற்போது அவரது வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உடன் அறிவிக்கவும்
இந்நிலையில், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 0112 514 374 என்ற இலக்கத்துக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற 4 இலங்கையர்கள், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam