மகிந்த கட்சி வேட்பாளருடன் மைத்திரி திடீர் சந்திப்பு
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் சுயேட்சை உறுப்பினர்களாக செயற்படுவதாக அறிவித்த உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.
அரசியல் எதிர்காலம்
தம்மிக்க பெரேராவுடன் தமது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடிய போதிலும் கலந்துரையாடலின் பெரும்பாலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவே போட்டியிடுவார் என அரசியல் தகவல்கள் பரவி வருகின்றன.
இருந்த போதிலும், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
