ராஜபக்சக்கள் தொடர்பில் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்திற்கு சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி
இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ராஜபக்ச அரசாங்கம் தொடர்பில் ஹேக்கில் அமைந்துள்ள மக்கள் தீர்ப்பாயத்திலும், ஐரோப்பிய புலனாய்வு முகவர் நிறுவனம் என்பனவற்றுக்கு சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜபக்ச தரப்பின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு நிசாந்த சில்வா என்ற இந்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் செனல் 4 காணொளி வெளியிட்ட தகவல்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை
இராணுவ புலனாய்வு பிரிவு, கடற்படை புலனாய்வு பிரிவு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் தாம் வெளிநாட்டில் அடைக்கலம் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விசாரணையை நடத்தி உண்மைகளை கண்டறிந்த காரணத்தினால் தமக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டது எனவும் கொலையாளிகளை தொலைபேசி தொடர்புகள் வழியாக கண்டுபிடிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் லசந்தவை ஐந்து இடங்களில் இருந்து பின்தொடர்ந்தனர் எனவும், இந்த கொலை குறித்து முக்கியசாட்சியங்களை தாம் திரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டாபயவை தாம் விசாரணை நடத்திய போது அவர் அதிருப்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 20 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
