இசைப்பிரியாவின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளிக்கு என்ன நடந்தது! (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய, புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை மானபங்கப்படுத்தி மிகவும் கொடூரமாக கொலை செய்த காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை இது தொடர்பில் முழுமையான விசாரணையாக நடைபெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளி
அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு மிக கொடூரமாக எம்மின மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதாவது ஒரு நீர்த்தடாகம் இருக்கிறது. நீர்த்தடாகத்திற்கு அருகில் சிறுவர்கள், ஆண்கள் ஆடைகள் இன்றி இருக்கிறார்கள்.
அதில் ஒரு பெண், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை மானபங்கப்படுத்தி மிகவும் கொடூரமாக கொலை செய்த காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது.
ஆக 2009ஆம் ஆண்டு மிக கொடூரமாக ஆண்கள், சிறுவர்கள், இசைபிரியா உள்ளிட்டோர் மானபங்கப்படுத்தி கொலை செய்யப்பட்டதை சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்தது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தை பலமுறை இந்த சபையில் கேட்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்தீர்களா என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரராஜசிங்கம் - ரவிராஜ் கொலையில் இராணுவப் புலனாய்வு: சனல் 4 காணொளியை உடன் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
