வடக்கு - கிழக்கில் பெரும் முடக்கம் : மதத் தலைவர்களுடன் பொலிஸார் கடும் வாக்குவாதம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் மதத்தலைவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் இரவோடு இரவாக வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் முகமாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |