அதிரடியாக முற்றுகையிட்ட பொலிஸார்! களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை
பொலிஸாருக்கும் பாதாள உலக குழுவினருக்கும் இடையில் களுத்துறை தியகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ”டிங்கர் லசந்த” என்ற ஹேவா லுனுவிலகே லசந்த என்பவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் என்றும் பல குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
”டிங்கர் லசந்த” கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி மாத்தறை, கொட்டவில பகுதியில் வைத்து, பாதாள உலகக் குழு உறுப்பினரான ”சன்ஷைன் சுத்தா“ கொல்லப்பட்ட சம்பவத்திலும் தேடப்பட்டு வந்தவராவார்.
டிங்கர் லசந்த தங்கியிருந்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டபோது பொலிஸார் மீது அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்தே பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் லசந்த கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது இரண்டு பொலிஸாரும் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam