சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரம்! அரசியல் சூழ்ச்சியென்கிறார் ராகுல தேரர்
சமீபத்தில் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள், சமூகத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமியின் தாயாரும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவளை அழைத்து வந்ததாகவும், நீண்டகால பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடம், பயன்படுத்தப்பட்ட அறை உள்ளிட்டவற்றை சிறுமி நேரடியாக அடையாளம் காட்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில்,பல்லேகம தேரர் விவகாரம் தற்போது பேசுபொருளாகவுள்ள சூழ்நிலையில், இந்தவிடயத்தில் பல சூழ்ச்சிகள் உள்ளதாக ராகுல தேரர் தெரிவித்தார்.
பண ஆசை மற்றும் பதவி ஆசை உள்ளவர்கள் இதனை வைத்து அரசியல் செய்வதால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்திற்கு கீழுள்ள காணொளியை காண்க...