அரசாங்க தரப்பிலிருந்து வசூலிக்க தவறிய பெருந்தொகை பணம்! வெளியான முக்கிய அறிக்கை
இலங்கையில் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களிலிருந்து வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூலிக்க தவறிய பணம்
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் தடய அறிவியல் மற்றும் டிஎன்ஏ பிரிவு, டிஎன்ஏ அறிக்கை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கின்றது.

இதன்படி, 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அந்த அறிக்கைகளுக்காக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்