மட்டக்களப்பு ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்காத பொலிஸ்! தடையுத்தரவு பிறப்பிப்பு
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிதரனுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தடை விதித்து களுவாஞ்சி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றம் ஊடாக பரவலாக போராட்டத்தினை முன்னெடுக்கும் அரசியலாவாதிகள், அமைப்புக்கள், அமைப்புக்களின் தலைவர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிதரனுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை உத்தரவானது ஜனநாயக சிவில் செயற்பாடுகளுக்கு எதிரானதும், ஊடகத்துறை மீது மீண்டும் இந்த அரசாங்கம் தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
எனவே ஊடகவியலாளர் மீது இவ்வாறானதொரு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளமையானது ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலான செய்தியை பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே ,மேற்படி ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட அச்சுறுத்தல் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும், இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் கைவைக்கின்ற செயற்பாடுகளை தடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.








1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
