ஆசிரியர் உயிரிழப்பு! தலவாக்கலை பகுதியில் அமைதியின்மை (PHOTOS)
நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை பகுதியில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை இன்று (21) அகற்றும் சந்தர்ப்பத்தில், மரம் வீழ்ந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் தலவாக்கலை தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் 37 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மரத்தை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது என கோரி, பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










