தலையில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா - மினுவாங்கொடை, வல்பித்தமுல்ல பகுதியில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியில் வசித்து வந்த ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் தலையில் பலத்த காயங்களை பொலிஸார் கவனித்ததால், அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
வீதி விபத்தாலோ அல்லது குற்றச்செயலாலோ காயங்கள் ஏற்பட்டனவா என்பதை புலனாய்வாளர்கள் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினுவாங்கொடை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல் - உயர் எச்சரிக்கை நிலையில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை