சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான சட்டவிரோத மதுபான போத்தல்களையும் மதுபான உற்பத்திக்கான கோடாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
மதுபான உற்பத்தியை தடுத்தல்
முழுநாடும் ஒன்றாக எனும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பகுதியில் அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் வவுணதீவு பிரதேசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையிட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபான பொருட்கள் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam