சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரால் முற்றுகை(Photos)
மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - குமாரபுரம் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தையே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸார் முற்றுகை
பெண் வியாபாரி ஒருவரையே 126 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களுடன் நேற்று(09) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று இரவு மதுபான விற்பனை இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது மதுபான வியாபாரியான பெண் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாபாரி கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி |