சமையல் எரிவாயு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி
3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.
மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள்
அதேவேளை நாளை மறுதினம்(11) மற்றும் 16 ஆம் திகதியும் மேலும் 3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 30 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.
ஒரு லட்சம் மொற்றி தொன் எரிவாயுவை இறக்குமதி செய்யும் உடன்படிக்கைகள் கைச்சாத்து
ஒரு லட்சம் மெற்றி தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய அண்மையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் லிட்ரோ எரிவாயு நிறுவனம் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயு நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
