போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் இணைந்து சேவையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், 200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் தனுதம்புவெள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 41 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்ற நிலையில், அண்மையில் ஒயாமடுவ பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.
போதைப்பொருள், கஞ்சாவுக்கு அடிமையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், தனுதம்புவௌ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரியுடன் நின்று கொண்டிருந்த போதே நொச்சியாகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்துள்ளனர்.
அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடமிருந்து 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam