நாளந்தா கல்லூரி அதிபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
கொழும்பு நாளந்தா கல்லூரியின் ஆசிரியை ஒருவர் அந்த கல்லூரியின் அதிபருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாளந்தா கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவர் தலைவரின் செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிபருக்கு முறைப்பாடு செய்ததாக குறித்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் அதிபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மாணவன் கல்லூரியின் ஆசிரியைகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாவும் இது குறித்து அதிபர், ஆரம்பப் பிரிவு அதிபர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர் ஆகியோருக்கு தாம் முறைப்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் எந்த ஒரு அதிகாரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நிர்வாகம் இடம் அளித்தது எனவும் எதனால் எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆசிரியை மட்டுமன்றி பௌத்தப்பிக்கு ஒருவரும் நாளாந்தா கல்லூரியின் அதிபருக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri