ஜனாதிபதியின் தூய்மையான இலங்கை திட்டம்! சமூக ஊடகங்களில் பரவும் குரல் பதிவு
சமூக ஊடகங்களில் பரவி வரும், தூய்மையான இலங்கை தொடர்பான, போலியான குரல் பதிவு குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
இந்த போலியான பதிவில், அரசாங்கத்தின் "தூய்மையான இலங்கை - 2025" திட்டத்துடன் தொடர்புடைய இலங்கை பொலிஸார், பொதுமக்களுக்கு அனுப்பியுள்ள சிறப்பு அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது.
குரல் பதிவு போலியானது
அத்துடன், இந்த குரல்பதிவில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், 2025 ஜனவரி 15 க்குப் பிறகு, இதனை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குரல் பதிவு போலியானது என்றும், அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த குரல் பதிவை உருவாக்கி விநியோகித்தவரை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.