வீட்டில் கஞ்சாசெடி வளர்த்து வந்த இளைஞருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பூச்சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று(17) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தலைமையக போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் சம்பவ தினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது வீட்டின் பூச்சாடி இரண்டில் 3 அரை அடி, மற்றும் 2 அரை அடி உயரமான கஞ்சா செடியை வளர்த்து வந்ததை கண்டுபிடித்ததையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
