கல்கிஸ்ஸையில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்
கல்கிஸ்ஸை நீதிமன்றத் தொகுதியில் கடந்த 10ம் திகதியளவில் சட்டத்தரணியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதியளவில் கல்கிஸ்ஸை நீதிமன்றத் தொகுதியில் இருந்து தனது காரில் வெளியேற முற்பட்ட சட்டத்தரணி குணரத்தின வன்னிநாயக்க என்பவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இடமாற்றம்
அதன் பிரகாரம் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மீதும் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸைப் பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் கடமையாற்றி வந்த அவர் தற்போது பிலியந்தலைப் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இதுவரையும் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்றும் அதற்குப் பதிலாக சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
