மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் மூவர் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் மாமானாரை வாளால் வெட்டிய சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் துவிச்சக்கரவண்டி திருடிய இளைஞன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12.09.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதூர் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை 9 ம் திகதி மதுபோதையில் மனைவியின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில், அவர் தலையிலும் கையிலும் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 30 வயதுடைய மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
வாளால் வெட்டித் தாக்குதல்
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 ம் திகதி மாமாங்கம் பகுதியில் மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போது மனைவியின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் புளியம் தீவு அதிகாரி வீதியில் வீடு ஒன்றில் வேலி அடைக்கும் வேலையில் ஈடுபட்ட 22 வயது இளைஞன் ஒருவன் அங்கிருந்த 50 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடி சென்ற நிலையில் சிசிரி கமாராவில் பதிலாகிய வீடியோ படத்தின் மூலம் அடையாளம் கண்டு கொண்ட திருடனை நேற்று கைது செய்தனர்.
இந்த வேவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது வாளால் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாமாங்கத்தைச் சேர்ந்தவரின் மருமகனை பிணையில் விடுவித்ததுடன் ஏனைய இருவரையும் எதிர்வரும் 25 ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |