பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியவர்கள் கைது
பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றின் செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட குற்றச்சாட்டில் கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் ஐவர் நேற்றையதினம் (06.12.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரீர பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டவர்கள் புவக்பிட்டிய, பல்லேவெல, தெமட்டகொட, பொலன்னறுவை மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்த 23, 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு குறித்த யுவதி 5 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான கல்வி மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
