திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் (10.1.2024) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே அவர் திருகோணமலை பகுதிக்கு சென்று போதைப்பொருளினை கைமாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri