யாழில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதி உட்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேகநபரான நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான
பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர்
பிரதீப் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri