நீதிமன்றச் செயற்பாட்டுக்கு இடையூறு: கைதான வர்த்தகர் விளக்கமறியலில்
ஹட்டன் நீதிவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் பணிக்குழாமின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நீதிவான் பிறப்பித்த உத்தரவை ஏற்று நீதிமன்றப் பதிவாளர் வர்த்தகரின் இல்லத்துக்குச் சென்ற போது, சந்தேகநபரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து நீதிமன்றப் பதிவாளரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
இதையடுத்து, ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் இன்று(21.06.2023) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
