வவுனியாவில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையினை பொலிஸார் நேற்று (05.03.2024) விடுத்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிப பெண்
அவருக்கான சிகிச்சைகள் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (04) குறித்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சுமார் 5 அடி உயரமுடைய உயிரிழந்த வயோதிப பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தோர் அல்லது உறவினர்கள் வவுனியா வைத்தியசாலையை அல்லது வவுனியா பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan