கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் விவகாரம்: சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கடன்களை திருப்பிச்செலுத்தாதவர்களின் சொத்துக்களை வங்கிகள், ஏலம் விடும் நடவடிக்கையை, டிசம்பர் வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளபோதும், அது நடைமுறைக்கு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சட்டத்தை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்த போதிலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் வங்கி வலையமைப்பிற்கு இது தொடர்பில் அறிவுறுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இடைநிறுத்த உத்தரவு
இடைநிறுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுமாயின் அமைச்சரவை தீர்மானித்தவாறு பரேட் என்ற நிறைவேற்று சட்டங்களை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று சஜித் பிரேமதாச யோசனையை வெளியிட்டுள்ளார்.
மேலும், நிதி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக, கடன்பட்டோரின் சொத்துகளை ஏலத்தில் விடுவது அமைச்சரவையின் முடிவுக்கு எதிரானது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
