ஊடகவியலாளரிடம் மன்னிப்புக் கோரிய பொலிஸ் பரிசோதகர்
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தலைமை பரிசோதகர் நியோமல் பெர்னாண்டோ, ஊடகவியலாளர் கல்ப குணரத்ன என்பவரை கைது செய்து சித்திரவதை செய்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட சம்பவத்திற்காகவே மன்னிப்பு கோரியுள்ளார்.
ஊடவியலாளர் கல்ப குணரத்ன,மேற் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
'டித்வா' நாடாளுமன்ற தேர்வுக் குழு தலைமை எதிர்க்கட்சிக்கு வேண்டும்: கயந்த கருணாதிலக்க எம்.பி கோரிக்கை
மீறப்பட்டுள்ள மனித உரிமைகள்
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான புத்தகக் குடிலில் ஒரு வாடிக்கையாளரைத் தாக்கிய சம்பவத்தில் தலையிட்டபோது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக ஊடகவியலாளர் கல்ப குணரத்ன 03.10.2024 அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் சுமார ஐந்து மணி நேரம் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கல்ப குணரத்ன, தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய தலைமை பொலிஸ் பரிசோதகர் நியோமல் பெர்னாண்டோ, ஜனவரி 2 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகி, வாக்குமூலம் மற்றும் வாய்மொழி அறிக்கை மூலம் ஊடகவியலாளர் கல்ப குணரத்னவிடம் மன்னிப்பு கேட்டார்.