வாழைச்சேனையில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் காணப்படுவதால் குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவ படையினரும் இணைந்து வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு இன்று முழுமையாக முடங்கிய நிலையிலிருந்ததை காணமுடிந்துள்ளது.
கோவிட் தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவை கருதிய செயற்பாடுகள் மட்டும்
நடைபெறுவதுடன், ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளன.




