யாழ். சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மிலேச்சத்தனமான தாக்குதல்
எனினும், தங்கள் 2 மாத குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குடும்பத்தினர் மீது பொலிஸார் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,
“நாங்கள் எமது வாகனத்தில் பயணிக்கையில், எங்களை முந்திச்சென்ற மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குளாகியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடித்து விட்டு வாகனம் செலுத்தியதாகவும் அது எமது தவறில்லை எனவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் எனது கணவரிடம் வாகன அனுமதிப்பத்திரத்தை கேட்டனர். போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வராததால் எனது கணவர் வாகன அனுமதி பத்திரத்தை கொடுக்கவில்லை.
இதனையடுத்து, அவரை பொலிஸார் தாக்கினர். தடுக்க முற்பட்ட என்னையும் தாக்கினர். கீழே விழுந்த எனது 2 மாத குழந்தையை எடுத்து வீசினர். எனது சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam