ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 52 சோதனை சாவடிகள் - அஜித் ரோஹண
கொழும்பில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 52 சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகருக்குள் அத்தியாவசிய சேவையின் நிமித்தம் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு பொலிஸாரினால் விசேட ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய தினம் ஒட்டப்படும் ஸ்டிக்கரின் நிறம் வேறுபடும். நேற்றைய தினம் ஒட்டிய ஸ்டிக்கர்கள் மூலம் இன்று பயணம் செய்ய முடியாது.
அத்துடன் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் இன்றைய நாளில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும், கொழும்பில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 52 சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.