கிண்ணியாவில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பத்து இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மணல் நேற்று (11) கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணலை எடுத்து, கிண்ணியா கண்டல் காட்டுப் பகுதியில் பத்து இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிராக
சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட மணலின் அளவைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




