கோவிட் அச்சுறுத்தலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தலைமையில் இந்த நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்து செல்லாதவர்கள் மற்றும் போக்குவரத்தில் முறையாகச் சுகாதார நடைமுறைகளை பேணாத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முகக்கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கோவிட் அச்சுறுத்தல் தீவிரம் பெற்றுவரும் நிலையில் கோவிட் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலே இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது மட்டக்களப்பு நகருக்குள் நுழைவோரினதும், வெளியேறுபவர்களினதும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளனர்.






ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri