கனடாவில் துருவக் கரடிகள் தாக்கி ஒருவர் பலி
கனடாவுக்கு (Canada) சொந்தமான ப்ரோவர்ட் தீவில் துருவக் கரடிகளின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தீவில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இரண்டு துருவக் கரடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏனைய ஊழியர்கள் இரண்டு துருவக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுள்ளனர்.
இரண்டாவது சம்பவம்
துருவக் கரடிகள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை என கூறப்பட்டிருந்தாலும் 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் துருவக் கரடிகள் மனிதர்களை தாக்கும் இரண்டாவது சம்பவம் இது ஆகும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு பெண் மற்றும் அவரது ஒரு வயதுடைய மகன் ஆகியோர் துருவக்கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        