இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
போலந்து சார்ட்டர் ஏர்லைன், என்டர் ஏர் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த விமான சேவை நேற்று (3.11.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Enter Air இன் முதல் விமானம் 206 சுற்றுலா பயணிகளுடன் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்......! காசா வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்: ஹமாஸ் அமைப்பினர் சூளுரை (Video)
இரண்டாவது பெரிய விமான நிறுவனம்
விமான நிலையம், விமான சேவைகள் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறையால் விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் பயணிகள் வரவேற்கப்பட்டனர்.
நேற்று (03.11.2023) முதல் மார்ச் 2024 இறுதி வரை போலந்திலிருந்து தொடர்ச்சியான விமானங்கள் இயக்கப்படும்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கும் தொடர் விமானங்களின் சேவை இருக்கும் என்றும், இது Green Holidays Center (Pvt) Limited உடன் இணைந்து செயல்படுவதாகவும் AASL தெரிவித்துள்ளது.
Enter Air என்பது போலந்தின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனம் மற்றும் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய விமான நிறுவனம் ஆகும்.