நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது!

Batticaloa Sri Lanka Law and Order NPP Government
By Ashik Mar 01, 2026 09:11 AM GMT
Report

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நீக்கக்கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில்  தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (28) மதியம் மன்னாரில் இடம்பெற்றுள்ள இந்த ஊடக சந்திப்பில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சம் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வில் சட்டத்தரணி, சமூக ஆர்வலர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு்ள்ளனர்.

ட்ரம்ப் இழைத்த வரலாற்று குற்றம்! இரத்தக்களரியை ஏற்படுத்தப் போவதாக ஈரான் பரபரப்பு அறிவிப்பு

ட்ரம்ப் இழைத்த வரலாற்று குற்றம்! இரத்தக்களரியை ஏற்படுத்தப் போவதாக ஈரான் பரபரப்பு அறிவிப்பு

மனித உரிமைகள்

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய தினம் சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஒட்டுமொத்த சமூகம் சேர்ந்து அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கொண்டு செல்வதற்காக நாங்கள் தபாலட்டையில் கையொப்பம் சேகரித்தல் மற்றும் இந்த ஊடக சந்திப்பை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது! | Pointless For Making Law Due To No Terrorism

அந்த வகையில், உங்களுக்கு தெரியும் தற்பொழுது இலங்கையினுடைய பேசுபொருளாக காணப்படுகின்றது, இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடான அல்லது பதிலீடான ஒரு சட்டமூலத்தை, அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் தொடர்பாக மக்களுடைய கருத்துக்களை கேட்டறியும் ஒரு செயல்பாடானது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நாங்கள் மக்களுடன் தொடர்ந்து பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், இது சம்பந்தமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் என்ற அடிப்படையில், ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயங்கர வாத சட்டத்திற்கான மாற்றீடான சட்டத்திற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த வேளையிலே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

ஏனென்று சொன்னால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற அவ்வளவு அம்சமும் புதிதாக வருகின்ற சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு இருப்பது, இலங்கையினுடைய அரசியலமைப்பில் அடிப்படை உரிமையை ஒரு பாதிக்கின்ற அல்லது அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் அமைந்து காணப்படுகிறது.

ஒரு அரசியலமைப்பிலே ஒரு உறுப்புரையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் அல்லது அதனுடைய அடிப்படைத் தன்மையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலமாகவே அச்சரத்துக்கள் திருத்தப்பட முடியும்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு

தமிழ் சமூகம்

அப்படி இருக்க, இந்த பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையினுடைய அடிப்படை உரிமையை கேள்விக்குட் படுத்துகின்ற இந்த சட்டமானது, இலங்கையினுடைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கமானது கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே, அது மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தகூடிய வகையில் அமைந்து காணப்படும் என்ற விடயத்தினை நாங்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்புகின்றோம்.

அதுமாத்திரமல்ல, இந்த சர்வதேச ரீதியாகவும் சரி அல்லது சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்படாத அல்லது தமிழ் மக்கள் மாத்திரமல்ல பெரும்பான்மை மக்களும் எதிர்க்கும் இந்தபயங்கரவாத தடைச் சட்டம் எங்களுடைய இந்த இலங்கை நாட்டிற்கு பொருத்தமில்லை.


நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது! | Pointless For Making Law Due To No Terrorism

ஏனென்று சொன்னால் தற்பொழுது பயங்கரவாதம் இல்லாத ஒரு நாட்டிற்கு ஏன் இந்த பயங்கரவாத சட்டம் என்ற கேள்வியானது அனைவர் மனதிலும் எழுகின்றது.

எனவே இந்த அரசாங்கமானது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அந்த வாக்குறுதிகளை பின்பற்றி, இந்த பயங்கரவாதத்தின் ஊடாக மக்களை அடக்கும் அல்லது ஒடுக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்.

எனவே இந்த சட்டமூலத்தை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம், தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ் சமூகம் எதிர்க்கின்றது என்ற செய்தியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மக்களை ஒடுக்கும் இத்தகைய சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US