பருத்தித்துறையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இன்று (18) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர்வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடரினை ஏற்றியதை தொடர்ந்து அகவனக்கம் இடம்பெற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாகத்தினர், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் உணர்வுபூர்வமாக பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பருத்தித்துறை நகர் பகுதி வர்த்தக நிலையங்கள் பகுதிநேரமாக அடைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam